கொடைக்கானலில் நேற்று இரவு வனப்பகுதியில் திடீரென பல ஏக்கர் பரப்பளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலை அடுத்த கோவில்பட்டி, புலியூர் அருகே தனியார் தோட்டங்கள் மற்றும் வனப்பகுதி உள்ளது. இங்கு நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான மரங்கள் கொழுந்துவிட்டு எரிந்த தீயில் கருகி நாசமானது. மேலும் வன விலங்குகளும் அங்கிருந்து தப்பி ஓடினர். கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த தீ பின் பல ஏக்கர் பரப்பளவில் பற்றி எரிந்ததால் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் வனத்துறையினர் தீயை அணைப்பதற்கு போராடி வருகின்றனர். ஆங்காங்கே வன பகுதியில் தற்போது சுட்டெரிக்கும் வெயிலால் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதனை தடுப்பதற்காக வனத்துறையினர் குழுக்களை அமைத்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.