Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில்…. எரிந்து நாசமான மரங்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

தீ விபத்து ஏற்பட்டதால் ஏராளமான மரங்கள் எரிந்து நாசமானது.

கரூர் மாவட்டத்தில் உள்ள கொட்டகை பகுதியில் விவசாயியான சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் பல்வேறு வகையான மரங்கள் மற்றும் செடிகள் அடர்ந்து வளர்ந்து இருந்துள்ளது. இந்நிலையில் வெயில் காரணமாக நேற்று முன்தினம் காய்ந்த செடிகளில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதன் பின் அங்கிருந்த மரங்களிலும் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடியிருப்பு பகுதிகளுக்குள் தீ பரவாமல் வேகமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஏராளமான மரங்கள் எரிந்து நாசமானது.

Categories

Tech |