கன்னியாகுமரியில் இருக்கும் சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் தற்போது மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. இந்நிலையில் குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் இந்த அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இதனையடுத்து அருவியின் மேல் பகுதியில் இருக்கும் தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர். இங்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் வரிசையாக நின்றதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் மாத்தூர் தொட்டி பாலத்திலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.