Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில்… சுருண்டு விழுந்து மூதாட்டி பலி…!!

சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தினால் மயங்கி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பே தினமும் 100 டிகிரி வெப்ப நிலையை தாண்டி வெயில் அதிகமாக அடித்து மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். வெயில் அதிகமாக அடித்து வருவதால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது.

இந்த வெயிலின் தாக்கத்தினால் முதியவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிடுகின்றன. இந்நிலையில் திண்டுக்கல் என். ஜி. ஓ காலனி அருகில் நேற்று முன்தினம் நண்பகல் 60 வயது மதிப்புள்ள ஒரு மூதாட்டி நடந்து சென்று கொண்டிருக்கும் போது வெயில் அதிகமாக அடித்ததால் அந்த மூதாட்டி திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூதாட்டி ஏற்கனவே இறந்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த மூதாட்டியை பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து பாலகிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அதிகாரி செல்வம் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் விஜய் வழக்கு பதிந்து அந்த மூதாட்டியின் பற்றிய விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். வெயிலின் தாக்கத்தினால் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |