சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தினால் மா மரங்களில் உள்ள பிஞ்சுகள் உதிர்ந்து போகின்றன.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகில் கோம்பைபட்டி, ஆயக்குடி, புளியமரத்து செட் ஆகிய இடங்களில் உள்ள தோட்டத்தில் மா சாகுபடி செய்யப்படுகின்றன. இந்தத் தோட்டத்தில் விளைகின்ற மாங்காய்களை பழனி, ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள சந்தைகளில் விற்க விவசாயிகள் கொண்டு செல்கின்றன.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மா மரங்கள் பூ பூத்ததால் விவசாயிகள் அந்த மாமரத்திற்கு மருந்து அடித்தார்கள். ஆனால் இந்தக் கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைப்பதால் வெயில் தாங்க முடியாமல் மா மரங்களில் உள்ள பிஞ்சுகள் உதிர்ந்து போயின. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, இந்த வருடம் மாமரங்களில் நல்ல முறையில் பூக்கள் பூத்து வந்தது.ஆனால் கடும் வெயிலின் காரணமாக அந்த பூக்கள் எல்லாம் உதிர்ந்து போய்விட்டன. இதேபோன்று காய்கள் பிடித்துள்ள மரங்களில் சிறிதாக உள்ள காய்கள் வெயில் தாங்க முடியாமல் பிஞ்சுகள் அப்படியே வெம்பி பழுத்து போய் கீழே விழுகின்றன. கோடை மழை பெய்தால் மட்டுமே மா, தென்னை மரங்கள் திரும்ப உயிர் பெறும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.