Categories
தேசிய செய்திகள்

சுட சுட இரும்புச் சங்கிலியை வீசி… “பேய் ஓட்டுவதாக கூறி பூசாரி செய்த கொடூர சம்பவம்”… துடிதுடித்து இறந்த இளம்பெண்…!!!

குஜராத் மாநிலத்தில் பேய் ஓட்டுவதாக கூறி ஒரு இளம்பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் தேவபூமி துவாரகை மாவட்டம், ஆரம்படா கிராமத்தைச் சேர்ந்த ரமீலா சோலங்கி என்ற 25 வயதான இளம்பெண் நவராத்திரி கொண்டாடுவதற்கு தனது கணவருடன் பாலாவுடன் கோமதி என்ற கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென்று அவரது கை கால்கள் நடுங்க தொடங்கியது. இதை பார்த்த பூசாரி கடவுள் இவர் மீது கோபத்தில் உள்ளதாகவும் இவருக்கு பேய் பிடித்து உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் அவர் தாக்கப்பட வேண்டும், அவ்வாறு செய்யாவிட்டால் இப்பெண் அனைவரையும் கொன்று விடுவாள் என்று கூறியுள்ளார்.

இதை நம்பிய கணவர், ரமீலாவை தாக்குவதற்கு ஒப்புக்கொண்டார். இதையடுத்து அந்த பூசாரி சூடான இரும்பு சங்கிலியை அவர் மீது வீசி கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ரமீலாவின் கணவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேய் ஓட்டுவதாக கூறிக் இளம்பெண்ணை கொன்ற பூசாரியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |