கறி பப்ஸ் செய்ய தேவையான பொருட்கள்
கொத்துக்கறி – 250 கிராம்
உருளைக்கிழங்கு – 2
மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
பட்டை, கிராம்பு தூள் – 1 தேக்கரண்டி
இஞ்சி – 1 அங்குலம்
பூண்டு – 5 பல்
மைதா – அரை கிலோ
கொழுப்பு – 100 கிராம்
சோடா உப்பு – 2 தேக்கரண்டி
முட்டை – 2
டால்டா – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 200
உப்பு – சிறிதளவு
மல்லித்தழை – 1 கைபிடி
புதினா – சிறிதளவு
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து அதில் கொத்துக்கறியை தனியாக எடுத்து உப்பு சேர்த்து வேக வைக்கவும். மற்றோரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து உருளைக்கிழங்கை வேக வைத்து உதிர்த்து கொள்ளவும்.
பின்னர் பொடியாக வெட்டிய மல்லித்தழை, புதினா, வெங்காயம், இஞ்சி நறுக்கி கொள்ளவும். அம்மியில் கொழுப்பை அரைத்து எடுத்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து டால்டா சேர்த்து அதனுடன் பொடியாக வெட்டிய மல்லித்தழை, புதினா, வெங்காயம், இஞ்சி, பூண்டு போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும்.
பின் வேக வைத்த கறி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உதிர்த்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து தண்ணீர் இல்லாமல் கெட்டியாக வதக்கி கொள்ளவும்.
பின்பு, வேக வைத்த கறி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உதிர்த்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து தண்ணீர் இல்லாமல் கெட்டியாக வதக்கி கொள்ளவும்.
அதனுடன் மைதா மாவு, முட்டை, உப்பு ,மஞ்சள் கரு, சோடா உப்பு அம்மியில் அரைத்த கொழுப்பு இவற்றை சேர்த்து நன்கு பிசைந்து 4 பூரிகளாக உருட்டி ஒன்றின் மேல் ஒன்று வைத்து, நீளமான பாய் போல் சுருட்டி 4 பாகங்களாக பிரித்து பழையபடி விரித்து உருட்டிகொள்ளவும்.
உருட்டி வைத்த மைதா மாவுடன் நடுவில் ஒரு மேஜைக்கரண்டிவதக்கிய கலவையை வைத்து அதன் மேல் வெள்ளைக்கரு தடவி கொள்ளவும் அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு டால்டாவை ஊற்றி இருபுறமும் வைத்து பொரிதால் சுவையான கறி பப்ஸ் ரெடி.