கேரள மாநிலத்தில் ஒரு கடையில் கட்சி சின்னத்தை கொண்டு தோசை சுட்ட சம்பவம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கடந்த தேர்தலில் முகக் கவசங்களில் கட்சியின் சின்னங்கள் பொறிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது வைரலானது. இதேபோன்ற சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் சின்னங்கள், வேட்பாளரின் சித்திரங்கள் ஆகியவற்றை சுடச்சுட தோசையில் போட்டு வினியோகம் செய்தது பலரையும் கவர்ந்துள்ளது.
கொல்லம் மாவட்டம் பகுதியில் உள்ள ஒரு கடையில் தக்காளி சாஸ், கேரட் ஆகியவற்றை கொண்டு அரிவாள், சுத்தி, நட்சத்திரம் போன்ற சின்னங்களைப் பொறித்து மற்றும் பொடிதாக நறுக்கப்பட்ட வெங்காயம், கேரட் ஆகியவற்றில் தாமரை சின்னத்தை வரைந்து என பல கட்சிகளுடன் சுடசுட தோசையை வினியோகம் செய்து வருகின்றனர். இது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் கூறுகையில் “ஆர்டர் வரும்பட்சத்தில் தோசைகளின் வேட்பாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வருவதால் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இதை செய்ததாக அவர் தெரிவித்தார். தற்போது கட்சிகளின் சின்னங்களை பொருத்து தருமாறு சொல்லி கொடுக்கிறார்கள் என்று கூறுகிறார்.