மண் சரிந்து விழுந்ததால் 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாம நத்தம் கிராமத்தில் ராஜப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி அதே பகுதியில் வசிக்கும் உமா, ராதாம்மா, விமலம்மா ஆகிய 3 பேருடன் இணைந்து வரும் போடுவதற்காக அப்பகுதியில் இருக்கும் விவசாய நிலத்தில் சுண்ணாம்பு கல் எடுப்பது வழக்கம். வழக்கம்போல பெண்களும் சுண்ணாம்புக்கல் எடுப்பதற்காக சென்றுள்ளனர்.
இதனை அடுத்து 4 பேரும் தோண்டப்பட்ட குழியில் இறங்கி சுண்ணாம்பு கல்லை எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து விழுந்துவிட்டது. இதனால் ராதாம்மா, லட்சுமி ஆகிய 2 பேரும் மண்ணில் புதைந்து விட்டனர். மேலும் விமலம்மா, உமா ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மண்ணில் புதைந்து உயிரிழந்த ராதாம்மா, லட்சுமி ஆகியோரின் சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.