ராம்குமார் வழக்கை சுதந்திரமாக விசாரணை செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராம்குமார் என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் மின் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் தனது மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை புகார் அளித்தார். இதனை மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை செய்தது. இந்நிலையில் ராம்குமார் மரணம் குறித்து சுதந்திரமாக விசாரணை நடத்த வேண்டும். மேலும் அவரது தந்தைக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.