Categories
உலக செய்திகள்

சுதந்திரம் வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…. தோட்டாக்களை பயன்படுத்தி கட்டுப்படுத்திய காவல்துறையினர்…!!

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்து யூரி மண்டலத்தில் அல்ட்ரா பகுதியில் நேற்று கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் யாரும் மாஸ்க் அணிய வில்லை என்றும் சமூக இடைவெளிகளை பின்பற்றவில்லை என்றும் தகவல் வெளியாகியள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் கொரோனா அச்சம் நீடிக்கும் காலநிலையில் அதிக மக்கள் திரள அனுமதி இல்லை என்றும் ஆனால் 500க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது என தெரிவித்துள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அமைதியாக கலைந்து செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது என்றும் ஆனால் யாரும் அதை கண்டுகொள்ளாத நிலையில் பெப்பர்ஸ்பிரே மற்றும் ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தி போராட்டத்தை கட்டுபடுத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |