சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் ஏற்ற தேசிய கொடியை ஆட்சியர் வழங்கினார்.
வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவகங்கை அடுத்து கீழப்பூங்கொடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு கூறியுள்ளதாவது, இந்திய திருநாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 75 வருடங்கள் ஆனதை முன்னிட்டு அதனை 75 ஆவது சுதந்திர திருநாள் அமுத திருவிழாவாக அரசால் கொண்டாடப்படுகிறது. தமிழக முழுவதும் அனைத்து வீடுகளிலும் வருகின்ற 13, 14 மற்றும் 15ஆம் தேதி தேசிய கொடியினை ஏற்றி வைத்து அனைவரின் பங்களிப்பையும் அளித்திடும் விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசால் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. அதன் அடிப்படையில் இங்கு தேசியக்கொடி வழங்கப்பட்டு வருகின்றது. இக்கொடியை மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் இணைந்து வீடுகளில் ஏற்ற வேண்டும் என கூறியுள்ளார்.