Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தினம்: இந்திய மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து….!!!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்மை மற்றும் அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியால் வழிநடத்தப்பட்ட இந்திய சுதந்திரம் நீண்ட பயணத்தை கடந்து வந்திருப்பதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு தமது வாழ்த்துகளை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அமெரிக்க நட்புறவு பல காலமாக நீடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதே போல் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கென் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் இந்தியாவும் அமெரிக்காவும் உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை வழங்கக்கூடிய ஜனநாயக நாடுகள் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |