Categories
மாநில செய்திகள்

சுதந்திர தின விடுமுறை…. தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.274 கோடிக்கு மது விற்பனை…..!!!!!

தமிழகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் அதாவது ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் 274 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறையுடன் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று பொது விடுமுறை என மூன்று நாட்கள் தொடர் விடுமுறையை கொண்டாட பலரும் சுற்றுலா மையங்களுக்கு படை எடுத்தனர்.

அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் நேற்று மதுக்கடைகளுக்கு விடுமுறை என்பதால் குடிமகன்கள் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் மது வகைகளை வாங்கியதால் அன்று விற்பனை கூடியுள்ளது. அதாவது 274 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள மது கடைகளில் மட்டும் 56 கோடி, திருச்சி மண்டலத்தில் 53.50 கோடி, சேலத்தில் 54 கோடி, மதுரையில் 58.26 கோடி மற்றும் கோவையில் 52.29 கோடிக்கு மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |