Categories
மாநில செய்திகள்

சுதந்திர தின விழா உரை… “புதிய கல்விக் கொள்கையால் மனநிறைவு ஏற்படுகிறது”…. ஆளுநர் பெருமிதம்…!!!!!

75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றப்படுகின்றது. இந்த சூழலில் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ரவி தேசிய கொடியை ஏற்றி உரையாற்றியுள்ளார். அப்போது நாட்டை பாதுகாக்கும் முப்படைகள், துணை ராணுவ படைகள், காவல்துறை, நுண்ணறிவு அமைப்புகள் போன்றவற்றின் பணிகளை பாராட்டியுள்ளார். மேலும் கொரானா பெருந்தொற்று காலத்தில் மருத்துவர்களின்  பணியில் பாராட்டி பேசினார்.

ஒலிம்பிக் போட்டிகள் பாரா ஒலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுகள் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்கள் மற்றும் பல்வேறு போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடி பதக்கங்களை பெற்று தந்தவர்களையும் வாழ்த்தி உள்ளார். புதிய கல்விக் கொள்கை பற்றி ஆளுநர் தனது உரையில் பாராட்டி பேசி உள்ளார். அதாவது புதிய கல்விக் கொள்கையில் கல்வியை பிராந்திய மொழிகளில் கற்பது பற்றி வலியுறுத்தப்படுகின்றது. உயர் கல்வி நிறுவனங்களில் தமிழ் மொழியின் பயன்பாட்டை புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது. மேலும் புதிய கல்விக் கொள்கை மக்களால் வரவேற்கப்பட்டிருப்பதையும் கல்வி நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதையும் காணும் போது மிகுந்த மன நிறைவு ஏற்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |