அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலை டிரம்பிடம் அவரது பாணியில் அவரின் தோல்வியை கூறும் கேலிச்சித்திரம் வரையப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் ஜோ பைடன் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருந்தாலும் டொனால்டு டிரம்ப் தனது தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல், தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறியுள்ளார். அதனால் சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அவ்வகையில் அமெரிக்காவில் இருக்கின்ற புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலை டிரம்பிடம் அவரது பாணியிலேயே அவரின் தோல்வியை கூறுவது போன்று கேலி சித்திரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
அதில், சுதந்திர தேவி ‘யூ ஆர் பயர்டு'(நீங்கள் பதவி நீக்கப்பட்டீர்கள்) என்று கூறுவது போன்று அந்தக் கேலிச் சித்திரம் வரையப்பட்டுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் தனது ஆட்சி காலத்தில் தன்னுடன் ஒத்துப்போகாத ஏராளமான அதிகாரிகளின் பதவியை பரித்திருக்கிறார். அப்போது அவர்களின் பெயர்களுடன்’ யூ ஆர் பயர்டு’ என்று குறிப்பிடுவார். அதனைப் போலவே அவரது பாணியில் அவரின் பதவி பறிக்கப்பட்டதாக சுதந்திர தேவி கூறும் கேலிச் சித்திரம் வரையப் பட்டுள்ளது.