தற்போது பெரம்பலூரில் ஒரு சுதந்திரபோராட்ட தியாகி உயிருடன் இருக்கிறார். அவர் ஆலத்தூர் தாலுகா, காரை கிழக்கு தெருவில் வசித்து வரும் கிருஷ்ணசாமி ஆவார். இந்நிலையில் சுதந்திர போராட்ட தியாகி கிருஷ்ணசாமியை கவுரவப்படுத்தும் வகையில் தாசில்தார் முத்துகுமார் தலைமையில் அலுவலர்கள் அவரின் வீட்டிற்கே நேரடியாக சென்றனர்.
இதையடுத்து அலுவலர்கள் கிருஷ்ணசாமிக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகளை வழங்கினர். அத்துடன் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர் சில பேர் சுதந்திரதின விழா நடந்த இடத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா சென்று பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.