சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை சேகரித்து ஒட்டிய மாணவனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேரளம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்நிலையில் 10-ஆம் வகுப்பு படிக்கும் பிரவீன்ஜி என்ற மாணவன் தினத்தந்தி நாளிதழில் வந்த 75 தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை சேகரித்து பெயர் பலகையில் ஒட்டி காட்சிப்படுத்தியுள்ளார்.
இந்த செயலை பேரூராட்சி மன்ற தலைவர் கீதா, பள்ளி தலைமை ஆசிரியர் மாதவன், பொதுமக்கள் என பலரும் பாராட்டியுள்ளனர். மேலும் பெயர் பலகையில் ஒட்டப்பட்டு இருக்கும் சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை பார்ப்பதற்காக ஏராளமானோர் வருகின்றனர்.