பொதுமக்களின் பார்வைக்காக சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் உருவ சிலைகள் அழகிய ரதங்களில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களின் உருவச் சிலைகள் அடங்கிய ரதங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டுள்ளது. அந்த ரதங்களில் அழகு முத்து கோன், மருது சகோதரர்கள், பூலித்தேவன், ஒண்டிவீரன், கர்னகிரி வீரன் சுந்தரலிங்கம், வீரபாண்டிய கட்டபொம்மன், குயிலி, வேலு நாச்சியார், போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மருது சகோதரர்கள் கட்டிய காளையார் கோவில் கோபுரமும் இதிலிருந்துள்ளது. மேலும் சேலம் விஜயராகவாச்சாரி, சுப்ரமணிய சிவா, வ. உ. சி, பாரதியார் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகளின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டிருந்தது.
மேலும் கடலூர் அஞ்சலையம்மாள், கக்கன், செல்லத்துரை குமாரப்பா, தஞ்சை ஜோசப் கெர்னேலியஸ், காயிதேமில்லத், திருச்சி வ.வே சாமிநாத அய்யர், திருப்பூர் குமரன், பொல்லான், தீரன் சின்னமலை, வாஞ்சிநாதன், இரட்டைமலை சீனிவாசன், காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கதேவர், ராஜாஜி, பெரியார் போன்ற தியாகிகளின் உருவச் சிலைகள் அடங்கிய ரதமும் இருந்துள்ளது. இந்த மூன்று அலங்கார ரதங்களும் முதலமைச்சரின் உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் பார்வைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தற்போது மெரினா கடற்கரையில் இந்த அலங்கார ரதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த அலங்கார ரதங்களை காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் அங்கு வருகின்றனர்.