கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காமராஜ் வேலைக்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டுள்ளார். இவர் மாதவரம் கனகம்மாசத்திரம் ஜி.என்.டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்ததை பார்த்து காமராஜ் அதிர்ச்சி அடைந்தார். இதனால் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு உடனடியாக காமராஜ் கீழே இறங்கி விட்டார்.
சிறிது நேரத்திலேயே கார் முழுவதும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமாகியது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.