Categories
உலக செய்திகள்

சுத்தமான சூழலில் வாழ்வது…. அடிப்படை உரிமை…. ஐ.நா – வின் தீர்மானம்….!!

சுத்தமான சூழலில் வாழ்வது அடிப்படை உரிமை என்ற தீர்மானம் ஐ.நா பொது சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுத்தமான சூழலில் வாழ்வது அடிப்படை உரிமை என்று ஐ.நா பொது சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எந்த எதிர்ப்பும் இல்லாமல் இந்த தீர்மானம் ஐ.நா பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு 161 நாடுகளும் ஆதரவு அளித்துள்ளன. ஒரு நாடு கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சீனா, ஈரான், ரஷ்யா போன்ற கூட்டமைப்பு  நாடுகள் இதில் கலந்து கொள்ளவில்லை.

இருப்பினும் இந்த தீர்மானத்தின்படி சுத்தமான, பாதுகாப்பான, ஆரோக்கியமான ஒரு சூழலில் வாழ்வது என்பது ஓர் அடிப்படை மனித உரிமையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின்படி காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு உலக அளவில் ஒரு தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக இந்த தீர்மானத்தின்படி ஐ.நா. சபை உறுப்பு நாடுகள் சுற்றுச்சூழலை பாதுகாத்து, காலநிலை மாற்றத்தை தடுத்து சுத்தமான, பாதுகாப்பான, ஆரோக்கியமான ஒரு சூழலை எற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |