Categories
அரசியல் மாநில செய்திகள்

சுத்தமா வச்சுக்கோங்க….! இல்ல நானே துடைப்பம் எடுத்து சுத்தம் செய்வேன்….. அது தான் என் பணி….!!!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்ட வானதி சீனிவாசனிடம் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் கொம்பட்டி காலனியில் மக்களை சந்தித்து குறைகளை கமலஹாசன் கேட்டறிந்து வருகிறார். அப்போது பேசிய அவர் 800 குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் கழிவறையே இல்லை. கழிவறை நாங்கள் கட்டிக் கொடுக்கிறோம். தேர்தல் வாக்குறுதிகள் இல்லை. எங்களால் முடிந்த அளவிற்கு செய்கிறோம்.

கிராம சபை தூசி தட்டி மீண்டும் நடக்க நாங்களும் காரணம். அம்மன்குல பகுதியில் ஆய்வு செய்து மக்களின் தேவையை செய்வோம். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட உறவு. சமூகத்திற்கான உறவு. நான்கு கழிப்பறைகள் கட்டித் தருகிறோம். எங்களுடைய கடமை எல்லாம் தமிழகத்தை வளப்படுத்துவதுதானே தவிர எங்களை வளப்படுத்திக் கொள்வது அல்ல. எனக்கு நீங்கள் ஒரு கைமாறு செய்ய வேண்டும். நாங்கள் கட்டிக் கொடுக்கும் கழிப்பறையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நானே துடைப்பத்தை எடுத்து சுத்தம் செய்வேன். தூய்மைதான் என் பணி” என்றார்.

Categories

Tech |