விஷ வாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் இருக்கும் சிட்கோவில் உலோக பட்டைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்நிலையில் தொழிற்சாலையில் இருக்கும் கழிவுநீர் தொட்டியின் அடைப்பை சுத்தம் செய்யும் பணியில் புதுகும்மிடிப்பூண்டி பகுதியில் வசிக்கும் பலராமன்(52), கோவிந்தன்(46), ஹரி(34) ஆகியோர் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது விஷவாயு தாக்கி ஹரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்த அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று ஹரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.