தந்தை மகனை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜே.ஜே நகரில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இவரது 2-வது மகனான குமார் என்பவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பதற்கு பணம் கேட்டு குமார் ராமசாமியை தொந்தரவு செய்துள்ளார். ஆனால் ராமசாமி பணம் கொடுக்க மறுத்ததால் கோபமடைந்த குமார் அவரது தலையில் சுத்தியலால் ஓங்கி அடித்துள்ளார்.
இதனால் படுகாயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமசாமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.