Categories
தேனி மாவட்ட செய்திகள்

சுத்தியலால் பலமாக அடித்து…. கேலி செய்வதில் நேர்ந்த விளைவு…. சக மாணவரின் முட்டாள்தனமான செயல்….!!

தேனியில் பள்ளியில் வைத்து இரு மாணவர்களுக்கிடையே கேலி செய்வதில் ஏற்பட்ட தகராறில் சக மாணவர் சுத்தியலால் அடித்ததில் மற்றொரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் கண்டமனூரில் தனசேகரன் என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியிலிருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பள்ளியில் பயிலும் மற்றொரு மாணவருக்கும் இடையே கேலி செய்தது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளியில் வைத்து இருவருக்குமிடையே மதிய வேளையில் கேலி செய்வதில் மீண்டும் தகராறு ஏற்பட்ட போது ஆத்திரமடைந்த சக மாணவர் அவரது கையில் மறைத்து வைத்திருந்த சுத்தியலால் தனசேகரின் மண்டையில் பலமாக அடித்துள்ளார்.

இதனால் அவருக்கு ரத்தம் அதிக அளவில் வெளியேறி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் பதற்றமடைந்த ஆசிரியர்கள் தனசேகரனை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் சக மாணவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனிடையே தேனி மருத்துவமனையிலிருந்த தனசேகரனை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனசேகரனக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார். இதனால் காவல்துறையினர் சக மாணவர் மீது போடப்பட்டிருந்த கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |