சுந்தர் சி நடிக்கும் தலைநகர் 2 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர்.சி. இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார். கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான தலைநகரம் படத்தின் மூலம் சுந்தர்.சி நடிகராக அறிமுகமானார். சுராஜ் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
முகவரி, காதல் சடுகுடு, தொட்டி ஜெயா போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த V.Z. துரை தலைநகர் 2 படத்தை இயக்கி வருகின்றார். ரைட் ஐ தியேட்டர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. சுந்தர்.சி கதாநாயகனாக நடித்து வரும் இத்திரைப்படத்தின் படபிடிப்பானது சென்ற வருடம் தொடங்கிய நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு படக்குழு உள்ள கேக் வெட்டி கொண்டாடி உள்ளன. இந்த புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது.