சுந்தர்.சி நடிக்கும் புதிய படத்தின் வில்லனாக அனுராக் காஷ்யப் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் சுந்தர் சி. இவர் தற்போது பட்டாம்பூச்சி, தலைநகரம் 2 மற்றும் வல்லன் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகின்றார். இந்நிலையில் திரிஷா நடிப்பில் வெளியான பரமபதம் விளையாட்டு படத்தை இயக்கிய திருஞானம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கின்றார்.
சுந்தர்.சி நடிக்கும் இந்த படத்திற்கு தரமாக மிரட்டும் ஒரு வில்லனை தேடிக் கொண்டிருந்த நிலையில் பல பல நடிகர்களை பரிசீலித்து வந்த நிலையில் இறுதியாக அனுராக் காஷ்யப் தான் அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என தேர்வு செய்யப்பட்டிருப்பதாக படக்குழு கூறுகின்றது. இத்திரைப்படத்தில் ராகினி திவேதி ஹீரோயினாக நடிக்கின்றார்.