சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 3 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் அரண்மனை. ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, வினய், சந்தானம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ஹன்சிகா, திரிஷா, சித்தார்த், வைபவ் ஆகியோர் நடிப்பில் அரண்மனை 2 திரைப்படம் வெளியாகி வெற்றிபெற்றது.
Here’s the First look 🔥🔥🔥#SundarCAranmanai3#அரண்மனை3
An #AvniCineMax Production@RaashiiKhanna_ #sundarc @iYogiBabu @manobalam @ssakshiagarwal @uksrr @CSathyaOfficial @FennyOliver @khushsundar @johnsoncinepro @kvMothi
@decteamworks1 pic.twitter.com/kv4bt3dn8B— Arya (@arya_offl) April 22, 2021
Here’s the motion poster from #SundarCAranmanai3#அரண்மனை3
An #AvniCineMax Production 💪💪@arya_offl @RaashiiKhanna_ #sundarc @iYogiBabu @manobalam @ssakshiagarwal @uksrr @CSathyaOfficial @FennyOliver @khushsundar @johnsoncinepro @kvMothi
@decteamworks1 pic.twitter.com/UMHEFyJrGX— Arya (@arya_offl) April 22, 2021
தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ராசி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் அரண்மனை 3 திரைப்படம் தயாராகியுள்ளது . மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது .