Categories
சினிமா தமிழ் சினிமா

சுந்தர்.சி யின் ‘அரண்மனை-3’… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!!!

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை-3 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை, அரண்மனை-2 ஆகிய படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம்  உருவாகியுள்ளது. சுந்தர்.சி இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா,  யோகிபாபு, விவேக், சாக்ஷி அகர்வால், மனோபாலா, நளினி, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Aranmanai third part second single Rasavaachiye update

குஷ்பூ சுந்தர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு C.சத்யா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் அரண்மனை -3 படத்தின் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ‘ரசவாச்சியே’ என்கிற இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |