சுந்தர்.சி நடிப்பில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர்.சி. இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார். கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான தலைநகரம் படத்தின் மூலம் சுந்தர்.சி நடிகராக அறிமுகமானார். சுராஜ் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
After the huge success of #Iruttu #SundarC n #VZDorai come again.#Thalainagaram2 Kick Started Today with Pooja
Starring #SundarC
Directed by @vdhorai
Produced by @righteye2021 #SMPrabakaran
DOP @krishnasamy_e @vichuviswanath #RightEyeTheatres @APVMaran#RSvenkat@teamaimpr pic.twitter.com/QoeSi1ZT1U— KhushbuSundar (@khushsundar) September 23, 2021
இந்நிலையில் சுந்தர்.சி நடிப்பில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முகவரி, காதல் சடுகுடு, தொட்டி ஜெயா போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த V.Z. துரை இந்த படத்தை இயக்க இருக்கிறார். ரைட் ஐ தியேட்டர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. மேலும் இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.