Categories
மாநில செய்திகள்

சுபஸ்ரீ வழக்கில் கைதான ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்..!!

சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் கைதான ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்வழங்கப்பட்டுள்ளது. 
சென்னை பள்ளிக்கரணையில் சமீபத்தில் பேனர் விழுந்து லாரி மோதிய  விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து இவ்வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக விசாரித்து வருகின்றது. இவ்வழக்கில்  அதிமுக பிரமுகர் ஜெயகோபால் உறவினர் மேகநாதன் போலீசில் சரணடைந்தார். பின்னர் தலைமறைவாக இருந்த ஜெயகோபாலை தீவிர தேடுதலுக்கு பின்  போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு உயர்நீதின்றத்தில் நடந்து வந்தது.
Image result for ஜெயகோபால்
இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணையின் போது, ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்வழங்கப்பட்டுள்ளது. ஏழை நோயாளிகளின் சிகிச்சைக்கு ரூ.50,000 வழங்கவும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனைக்கு தலா ரூ.25,000 வழங்கவும், மதுரையில் தங்கி தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
Image result for ஜெயகோபால்
அதேபோல இந்த வழக்கில் கைதான மேகநாதன் என்பவருக்கும்  பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேகநாதனின் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை பரிசீலனையில்  இருப்பதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Categories

Tech |