பாஜகவின் எம்பி சாக்ஷி மகாராஜ் காங்கிரஸ் தான் சுபாஷ் சந்திர போஸை கொலை செய்தது என்று உரையாற்றியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாஜகவின் எம்பியான சாக்ஷி மகாராஜ் என்பவர் உத்திரபிரதேசம் மாநிலத்தில் இருக்கும் உன்னாவ் என்ற பகுதியில் நடைபெற்ற பேரணி ஒன்றில் பங்கேற்று உரையாற்றியுள்ளார். அதில் பேசிய அவர் “காங்கிரஸ்தான் சுபாஷ் சந்திர போசை கொன்றது என்றும் சுபாஷ் சந்திர போஸின் பெருமைகளுக்கு முன்னால் மகாத்மா காந்தி மற்றும் பண்டிட் ஜவஹர்லால் நேரு போன்றோரால் நிற்க முடியாது என்று பேசியுள்ளார்.
மேலும் தற்போது சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளை நாடு முழுவதும் கொண்டாடி கொண்டிருக்கும் நேரத்தில் பாஜக எம்பியின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது கடந்த 1945 ஆம் வருடத்தில் ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதியன்று தைபேயில் நிகழ்ந்த விமான விபத்தில் சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்த சம்பவம் பல வருடங்களாக சர்ச்சையாக இருந்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு கடந்த 2017 ஆம் வருடத்தில் ஆர்டிஐ மூலம் விமானத்தில் தான் சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்தார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.