Categories
சினிமா தமிழ் சினிமா

சுப்பர்ல…! சூப்பர் ஸ்டார் வீட்டில் உள்ள கொசு பேட் விலை எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்…!!!

பண்ணையாருக்கும், பழங்குடி மக்களுக்கும் இடையேயான நிலப்பிரச்சனையை பண்பாட்டுக் கூறுகளோடு பதிவு செய்யும் படம் காந்தாரா. இதில் கன்னட நடிகர் ரிஷப் செட்டியின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக மிகப் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பையடுத்து இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிட போவதாகவும் அந்த படக்குழு அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை அவருடைய இல்லத்தில் ரிஷப் ஷெட்டி சந்தித்து பேசி ஆசி பெற்றுக் கொண்டார்.

நீண்ட நேரம் ரிஷபோடு உரையாடிய ரஜினிகாந்த் மிகச்சிறந்த படம் காந்தாரா என்று புகழ்ந்திருந்தார். இவர்கள் இருவரும் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ரிசப் ஷெட்டி வெளியிட்டார். ஆனால் அந்த புகைப்படத்தில் ரஜினிகாந்தின் வீட்டில் இருந்த கொசு பேட் தான் பலருடைய கவனத்தையும் ஈர்த்தது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கொசு பேட் விற்பவர் ஒருவர் ட்விட்டரில் ரஜினியின் படத்தை பயன்படுத்தி விளம்பரம் செய்துள்ளார். அமேசானில் விற்கப்படும் இந்த பேட்டின் விலை 749 ரூபாய். போட்டோவின் மூலையில் இருந்த கொசு பேட்டை வெச்சு என்னவெல்லம் செய்றாங்க பாருங்க.

Categories

Tech |