நமது முன்னோர்கள் நமது வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும், தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக சில பழக்கவழக்கங்களை நடைமுறைப் படுத்தி உள்ளனர். அதில் முக்கியமானது வீட்டில் மாவிலையை கட்டுவது. வீட்டில் நுழையும்போது துர்தேவதைகளை வீட்டில் வருவதை தடுப்பதற்காக நூலில் மஞ்சளை தேய்த்து அதில் மாவிலையை கோர்த்து, அதில் மஞ்சள் குங்குமம் வைத்து சிறிது வேப்பிலையுடன் சேர்த்து வீட்டின் வாசலில் கட்டுகின்றனர்.
மாவிலைத் தோரணம் நாம் பொதுவாக பண்டிகை நாட்களிலும், வீடு கிரகப்பிரவேசம் செய்யும் போது, சில முக்கிய பண்டிகைகள் காலத்தில் அதை கட்டுவோம். இதற்கு ஒரு சிறப்பு தன்மை உண்டு. மாமரத்தில் இருந்து இலையை பறித்த பிறகும் கரியமில வாயுவை உள்ளே எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியேற்றும். மாமர இலைகள் ஒரு கிருமி நாசினியாகவும், வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை நீக்கவும் உகந்தது. இதற்கு 11 அல்லது 21, 101, 1001 மாவிலைகள் தோரணமாக கட்டுவது நல்லது. பெரும்பாலும் ஒற்றைப்படை எண்களில் இதனை கட்ட வேண்டும்.