பெர்த்தில் உள்ள கார்டின் பல்கலைக்கழகத்தின் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகில் பழமையான இதயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 380 மில்லியன் வருடங்கள் பழமையான மீன் வகைகளில் இந்த இதயம் கண்டறியப்பட்டுள்ளது.முதல்முறையாக ஆர்த்ரோடைர் எனப்படும் அழிந்து போன மீன் இனங்களில் சிக்கலான எஸ் வடிவ இதயத்தின் 3d மாதிரியை ஆராய்ச்சி குழு உருவாக்கியது.
இந்த கண்டுபிடிப்புகள் இதயத்தின் பரிணாம வளர்ச்சி தொடர்பான ஆய்வில் முக்கியமான மைல் கல் என்றும் சொல்லலாம். இது குறித்து பேராசிரியர் ஒருவர் கூறுகையில், 20 வருடங்களுக்கும் மேலான புதை படிவங்களை ஆய்வு செய்த ஒரு பழங்கால ஆராய்ச்சியாளர் என்ற முறையில் 350 மில்லியன் ஆண்டுகள் பழமையான மூதாதையாரின் இதயம் கிடைத்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.