Categories
அரசியல்

சும்மாவே இருக்க மாட்டீங்களா…? தமிழ்நாட்டை தேவையில்லாமல் சீண்டி பார்க்காதீங்க….!! கர்நாடகாவிற்கு எச்சரிக்கை விடுத்து ஜி.கே வாசன்…!!

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்த்து வரும் கர்நாடக அரசின் மீது ஜி.கே வாசன் தன்னுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தன்னுடைய அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தால் தொடங்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை கர்நாடக அரசு எதிர்ப்பது மிகவும் கண்டனத்திற்குரிய செயலாகும். கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்கி வரும் நீரை கொண்டு தான் இத்திட்டம் தொடங்கப் படுகிறது. மேலும் இத்திட்டத்திற்கு காவிரி நடுவர் நீதி மன்றமும் சுப்ரீம் கோர்ட்டும் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கையில் இந்த திட்டத்திற்கு தொடர்ந்து கர்நாடக தடை விதிப்பது ஏன்..? என எனக்கு புரியவில்லை.

இது தமிழகத்திற்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி ஆகும். ஏற்கனவே காங்கிரஸும் கர்நாடக அரசும் சேர்ந்து கொண்டு மேகதாதுவில் அணை கட்டி தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. இந்நிலையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கர்நாடகா தொடர்ந்து தடுத்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட மக்கள் தங்கள் குடிநீர் தேவைக்கு இந்த நீரையே சார்ந்துள்ளனர். எனவே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை கர்நாடக அரசு உடனே கைவிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.!” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |