முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சும்மா ஒரு ஸ்டேட்மென்ட் பேப்பர்ல ஒரு லைன் அடிச்சி விடுறாங்க, தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்ட விட்டது, தமிழ்நாட்டில் நடந்த வெள்ள சேதத்திற்கு மத்திய அரசு எந்த பணமும் தரவில்லை என்று, எவ்வளவு கோவம் வரும் என்று பாருங்க.
அதாவது 1,650 மெடிக்கல் சீட், ஆட்சிக்கு வந்த பிறகு எந்த ஒரு மாநிலத்திலும் மருத்துவ சீட்டை டபிள் பண்ணவில்லை, தமிழ்நாட்டில் மட்டும்தான் மெடிக்கல் சீட்டை டபிள் பண்ணிருக்காங்க. அதிக அளவிலான தனியார் மருத்துவ கல்லூரி தமிழ்நாட்டில் உள்ளது. நிறைய அரசியல்வாதிகள் நடத்துகின்ற மருத்துவகல்லூரி தமிழ்நாட்டில் உள்ளது.
ரத்தத்தை உறிஞ்சி, அட்டை மாதிரி, சொத்தை விற்று, நகையை விற்று, பத்திரத்தை விற்று, பிச்சைகாரர்கள் மாதிரி இருந்து அவர்களுடைய குழந்தைகளை மெடிக்கல் படிக்க வைக்க பிச்சைகாரர்களை போல் சுத்திகிட்டு இருக்காங்க. பெயருக்கு ஒரு நுழைவு தேர்வு நடத்தி கல்லா கட்டுற வேலை. அதனால் தான் white பேப்பர் கேட்கிறோம், white பேப்பர் குடுங்க பேசிக்கலாம்.
ஒரு குடும்ப வாழ வேண்டும், அந்த குடும்பம் நடத்துகின்ற மெடிக்கல் காலேஜ் வாழனும், அவர்கள் எம்பி நடத்துகின்ற மெடிக்கல் காலேஜ் வாழனும், இதைதான் செய்தியா போடுறீங்க, இது தான் நீட் எதிர்ப்பு. நீட் எதிர்ப்பு ஒரே வரியில் சொல்லணும் என்றால் உங்களுடைய மெடிக்கல் காலேஜ்ல கேப்பிடேசன்-ல ஆட்கள் வர மாட்டாங்க என்பதுதான் ஃபுல் ஸ்டாப். இதற்கு மேல பேசுவதற்கு அதில் ஒன்றுமே கிடையாது.
ஆனால் அப்படி போடுகின்ற ஊடக நண்பர்கள் 1650 சீட் 12ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு கிடைக்குது, இதுக்கு முன்னாடி 2300 சீட் கிடைத்தது. கோயம்புத்தூரில் அட்டைப்பாடியில் கேரளா பார்டரில் டிரைபில் செட்டில்மென்ட்ல படித்த பொண்ணு போகும்போது சொல்லுது, மெடிக்கல் கிடைத்துவிட்டது, முதல் தடவை கிராமத்தில் மெடிக்கல் சமுதாயத்தில் மெடிக்கல் என்று சொல்லிட்டு போகுது அத போடுங்க.
எல்லாரும் கவர்மெண்ட் கோட்ட இன்ஜினியரிங் படிச்சிட்டு கோபாலபுரத்தில் பிறந்து, எம்எல்ஏவாக இருந்து அண்ணா யுனிவர்சிட்டியில் சிண்டிகேட் உறுப்பினராக இருப்பவரை பேப்பரில் போடுகின்றோம். எதற்காக ? சொத்த வித்து, நகையை வித்து, பாத்திரத்தை வித்து டிரைபில் செட்டில்மென்ட்ல படித்த பொண்ணை காட்ட மறுக்கிறோம். இதுதான் குட் கவர்ணன்ஸ்ஸா ? இது தான் சமூக நீதியா ? இது தான் நம்முடைய செய்தியின் வெளிப்பாடு என அண்ணாமலை தெரிவித்தார்.