ஆமைக்கறி, பூனைக்கறி சாப்பிட்டேன் என்று சீமான் பேசிவரும் வீடியோவை வைத்து இலங்கை நாடாளுமன்ற எம்பி கிண்டலடித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மறைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தேன், ஆமை கறி சாப்பிட்டேன், அரிசி கப்பல், ஏகே 47 எடுத்து வைத்து படபடன்னு சுட்டேன் என்று அடிக்கடி பேசுவார். இவரது இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களால் செமையாக ட்ரோல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் சீமான் பேசுவது எல்லாம் பொய். புலிகள் பற்றியும் பிரபாகரன் பற்றியும் பேசி ஒன்றும் தெரியாத இளைஞர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார் என்று பலரும் விமர்சிப்பதுண்டு.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் சொல்லி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர் அடிக்கடி கூறுவார். இந்நிலையில் சீமான் பேசிவரும் ஆமைக்கறி விவகாரத்தை முன்வைத்து இலங்கை நாடாளுமன்ற எம்பி ஒருவர் கிண்டலடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட 2ஆம் வாசிப்பு மீதான 4ஆவது நாள் விவாதம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அதில் பேசிய டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான கட்சி தமிழக தேசியக் கூட்டமைப்பினரை கடுமையாக சாடியும் விமர்சித்தும் பேசினார்.
அப்போது தமிழ்நாட்டில் உள்ள சீமான் போன்ற தமிழ் இனத்தை வைத்து ஆமைகறி பூனை கதை சொல்லி தமிழக மக்களை வைத்து, தமிழ் மக்களின் துன்பத்தை வைத்து பிழைப்பு நடத்துவது போல் சுமந்திரன் உருவெடுத்துள்ளார். இலங்கையில் சீமான் விளைந்த நெல் வயலுக்குள் மாட்டை இறக்கி உழ வைக்கின்றார். வன்னியில் இறந்தபின் உள்ள நகைகளை எடுத்துக் கொண்டு வந்தவர்தான் இந்த எம்பி சுமந்திரன். இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவே தகுதி இல்லாத மனிதன் என்று கடுமையாக சாடியுள்ளார்.