Categories
அரசியல்

சும்மா இல்ல….! நாங்க எல்லாம் வேற லெவல்… 5 வருசத்துல 2முறை…! கெத்து காட்டி பேசிய எடப்பாடி …!!

உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தல் நேரத்தில் திரு ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, எல்லா இடத்திலும் பேசினார், திமுக நிர்வாகிகளும் பேசினார்கள். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் ஐந்து சவரனுக்கு குறைவாக அடமானம் வைத்திருந்தால் அரசாங்கம் அந்த பணத்தை செலுத்தும் என்று சொன்னார். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் நகை கடன் தள்ளுபடி செய்வதற்கு இந்த ஆட்சிக்கு வந்தபிறகு செலுத்தும் என்று சொன்னார்கள்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் இல்லை, கூட்டுறவு வங்கிகளிலும் அடமானம் வைத்த நகைக்கும் தள்ளுபடி இல்லை, இதுவும் பொய்யான அறிக்கை. கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசில்  நான் முதல்-அமைச்சராக இருந்தபோது ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு, சட்டம் அமல்படுத்தப்பட்டு ரத்து செய்தோம். 12 ஆயிரத்து 110 கோடி விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தின் மூலமாக பயிர் கடன் பெற்றதை தள்ளுபடி செய்தோம். இதுவரைக்கும் அதையும் நிறைவேற்றவில்லை.

வேண்டுமென்று திட்டமிட்டு அண்ணா திமுக அரசாங்கம் தள்ளுபடி செய்த ஒரே காரணத்திற்காக ஏதேதோ சொல்லி அதையும் காலம் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். நல்ல சிந்தித்துப் பாருங்கள்…. ஐந்தாண்டு காலத்திலே இரண்டு முறை விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்யப்பட்ட ஒரே அரசாங்கம் அம்மாவின் உடைய அரசாங்கம்.

2016ல் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சட்டமன்ற பொது தேர்தலின் போது நான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார்கள், அதேபோல அம்மா முதலமைச்சர் ஆனார்கள்,விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது, கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றிய அரசாங்கம் அம்மாவினுடைய அரசாங்கம்.

மாணவர்கள், இளைஞர்கள் படிக்கின்ற காலகட்டத்தில் கல்வி கடன் தருவார்கள். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் கல்விக் கடனாக பெற்றார்கள், கூட்டுறவு சங்கத்திலும் கல்விக்கடனை மாணவர்கள்,  இளைஞர்கள் பெற்றார்கள்.

அந்த கடனை ரத்து செய்வதாக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்தார்.. பொதுக்கூட்டத்தில் பேசினார், அந்த அறிவிப்பும் இல்லை. அதனால் மாணவர்களையும்  ஏமாற்றிவிட்டார்,  இளைஞர்களையும் ஏமாற்றி விட்டார்,  கல்வி கடன் ரத்து என்ற பேச்சே இதுவரைக்கும் எழவில்லை, அதுவும் ஏமாற்றப்பட்டு விட்டது, பொய்யான அறிக்கை.

தமிழகத்தில் 35 லட்சம் பேர்  முதியோர் உதவி தொகை பெற்றுக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுக்கு வழங்கப்படுகின்ற முதியோர் உதவித் தொகையை 500 ரூபாயில் இருந்து 1000 ஆக உயர்த்திய தலைவி அம்மா. மீண்டும் அம்மாவின் ஆட்சி வந்து இருந்தால் உயர்த்தி கொடுத்து இருப்போம். திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன் முதியாருக்கு வழங்கப்படும் உதவித்தொகை 1000த்தில் இருந்து 1500 ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்தீர்கள். இதுவரைக்கும் எந்த அறிவிப்பும் இல்லை.  மாணவர்களின் ஏமாற்றிவிட்டார்,  முதியோர்களையும்  ஏமாற்றிய ஒரே கட்சித் தலைவர் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலின் தான் என எதிர்க்கட்சி தலைவர் விமர்சித்தார்.

 

Categories

Tech |