திமுக அரசு அணைத்து துறைகளிலும் ஊழல் செய்கிறது என்று, உண்மையான எதிர்க்கட்சி பாஜக தான் என அண்ணாமலை கூறியதற்கு அதிமுக அமைதி காக்கின்றது என்ற கேள்விக்கு, செல்லூர் ராஜு கூறுகையில், அமைதி காக்கவில்லை. ஜனநாயக முறைப்படி 6 மாதம் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். எங்கள் மீது மசாற்றை அன்பு வைத்துள்ள தமிழ் மக்கள் மீது எந்த இடையூறு வரக்கூடாது.எதையெல்லாம் செய்வோம் என்று கூறி உள்ளார்களோ அதை செய்ய வேண்டும்.
இந்த அரசு இன்னும் கவனம் செலுத்த வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் கட்சியை வளர்க்க வேண்டும் என பேசியுள்ளார். எங்கள் கட்சியை பொறுத்தவரை எடுக்க வேண்டிய நடவடிக்கைள் அனைத்தையும் எடுப்போம். மக்கள் எதிர்பார்க்கின்ற பணி எல்லாம் செய்யவில்லை என்றால் நிச்சயமாக போராட்டம் வலுவாக இருக்கும்.அண்ணா திமுக போராட்டம் என்றால் ஏனோதானமாக இருக்காது.
இந்த அரசு காழ்ப்புணர்ச்சியுடன் அம்மா பெயர் பல்கலைக்கழகதை எதிர்த்ததற்கு ஒரு சின்ன அறிவிப்பு கொடுத்ததற்கு ஆங்காங்கே எழுச்சியாக பல லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு காவல்துறை மற்றும் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மாநில முதல்வரான முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கே தெரியும். திமுக தலைவராக அவர் இருக்கலாம் என செல்லூர் ராஜீ தெரிவித்தார்.