வலிமை படத்தை ரசிகர்களுடன் படக்குழுவினர் பார்க்க வந்த நிலையில் இயக்குநர் எச்.வினோத் எஃப்.டி.எஃப்.எஸ் பார்க்க வரவில்லை.
நடிகர் அஜித் குமார் நடித்த வலிமை படம் பிப்ரவரி 24-ஆம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பினால் முதல் நாள் முதலே அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள வலிமை படத்திற்காக அஜித் ரசிகர்கள் பல திரையரங்குகளை திருவிழாவாக மாற்றியுள்ளனர். அதிகாலை காட்சிக்காக திரையரங்கில் இரவிலிருந்தே ரசிகர்கள் காத்திருந்தனர். பட்டாசு வெடித்து, பாடல்களை ஒளிபரப்பி பண்டிகையைப்போல் கொண்டாடினர்.
இந்நிலையில் சென்னையில் பிரபல திரையரங்கில் வலிமை படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் காண வலிமை படக்குழு வந்துள்ளது. சென்னையில் பிரபல திரையரங்கான ரோஹிணி தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சியை காண படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர், நாயகி ஹீமா குரேஷி மற்றும் வில்லனாக நடித்த கார்த்திகேயா ஆகியோர் வந்துள்ளனர். அவர்களை பார்த்ததும் ஆரவாரம் செய்த ரசிகர்கள் அவர்களை தங்கள் கைத்தட்டலின் மூலமும், விசில் சத்தத்தின் மூலமும் வரவேற்றனர்.
தங்கள் படத்தை ரசிகர்களுடன் பார்த்த படக்குழுவினர்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. ஆனால் இயக்குநர் வினோத்தை காணவில்லை. இதனை தொடர்ந்து வலிமை படத்தை நான் ஏற்கனவே பல முறை பார்த்துவிட்டேன். அதனால் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க மாட்டேன் என்று வினோத் தெரிவித்திருந்தார். ஏதோ சும்மா சொல்கிறார் என்று பலரும் நினைத்தனர். ஆனால் நிஜகமாவே அவர் இன்று எஃப்.டி.எஃப்.எஸ் பார்க்க வரவில்லை.