உலக நாயகன் கமலஹாசன் 35 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் மணிரத்தினத்தோடு இணைந்து நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தற்போது கமலஹாசன் திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் இது. உலக நாயகனின் 234 ஆவது படம் பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவர உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
நாயகன் படத்தின் கூட்டணிக்கு பிறகு கமல் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் அவர்களும் இந்த படத்தில் இணைய உள்ளார்கள். இதற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார். ராஜ் கமல் பிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவி இணைந்து தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.