Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சும்மா நிக்காங்கனு பார்த்தா இத வச்சிட்டு இருந்திருக்காங்க…. ரோந்தில் தூக்கிய காவல்துறையினர்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் சீதாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரும், இவரது மகனும் அதே பகுதியிலிருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்றனர். இதற்கிடையே திருமங்கலம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டரான லட்சுமணன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு ரோந்து சென்றனர்.

அப்போது காவல்துறையினர் அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த சீதா லட்சுமியின் பையை சோதனை செய்துள்ளனர். அப்போது அதனுள் 2 கிலோ மதிப்புடைய கஞ்சா இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்ததோடு மட்டுமில்லாமல் அவரிடம் இருந்த 2 கிலோ மதிப்பிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய சீதாலட்சுமியின் மகனையும் தேடி வருகின்றனர்.

Categories

Tech |