Categories
சினிமா தமிழ் சினிமா

‘சும்மா பழசை நினைச்சு அழுது பீல் பண்ண கூடாது’… ரசிகரின் கேள்வி… டிடி-யின் வேற லெவல் பதில்…!!!

தொகுப்பாளினி டிடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் டிடி . இவர் அன்புடன் டிடி, ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் பவர் பாண்டி உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் தொகுப்பாளினி டிடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர் உங்களுடைய பழைய வாழ்க்கை உங்களுடைய தற்போதைய மகிழ்ச்சியை பாதிக்கிறதா ? எப்படி அதை நீங்கள் கையாளுகிறீர்கள் ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு டிடி ‘இல்லை, ஒரு தடவை முடிந்து விட்டால் அது முடிந்துவிட்டது தான். என்றுமே அதை திரும்பிப் பார்க்கக் கூடாது ‌. அதில் கிடைக்கும் பாடத்தைக் கற்றுக் கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும். வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை யோசித்து போய்க்கொண்டே இருக்கவேண்டும். சும்மா பழசை நினைத்துக் கொண்டு அழுது பீல் பண்ண கூடாது’ என பதிலளித்துள்ளார். தற்போது டிடியின் இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |