Categories
சினிமா தமிழ் சினிமா

சும்மா வாய்க்கு வந்தபடி பேசாதீங்க…! லண்டனில் புது வீடு வாங்கினாரா நடிகை குஷ்பு…? அவரே சொன்ன பதில்….!

குஷ்பு  தமிழகத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார்.  தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், “தற்போது லண்டனில் உள்ள புதிய வீட்டில் முதல் தேநீர் அருந்துகிறேன்” என்ற பதிவுடன் தேநீர் கிளாஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பலர் லண்டனில் குஷ்பு சொந்தமாக வீடு வாங்கி விட்டார் என்று நினைத்து வாழ்த்தியும் விமர்சித்தும் பதிவுகளை வெளியிட்டனர். இந்நிலையில் குஷ்பு, “நான் புதிய வீடு என்றுதான் சொன்னேன். அதை சொந்தமாக வாங்கினேன் என்று அர்த்தம் இல்லை. அது வாடகை வீடா என்று கேட்க கூடாதா. சில தீயவர்கள் மோசமான கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்” என்று தனது டிவிட்டரில் கூறியுள்ளார்.

Categories

Tech |