மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனம் இருபத்தி ஏழாவது நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக தமிழக ஆளுநர் நேற்று மயிலாடுதுறைக்கு வந்தார். இதனை தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற போது பல்வேறு அமைப்பினர் ஒன்றுகூடி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஏற்கனவே அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸ்க்காரர்கள் போராட்டக்காரர்களை தடுப்பு வைத்து தடுத்து நிறுத்தினர்.
ஆனால் திடீரென்று போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியை ஏந்தியபடி ஆளுநருக்கு எதிராக பதாகைகளை பிடித்து கொண்டு கோஷம் எழுப்பினர். மேலும் ஆளுநர் பின்னால் சென்ற பாதுகாப்பு வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கருப்புக்கொடி வீசியும், பதாகைகளை எரிந்தும் தங்களுடைய கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். இதற்கு அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆளுநர் வாகனத்தின் மீது கொடிகளை வீசியவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று அதிமுக சார்பாக ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் திமுக கூட்டணி கட்சிகள் தான் ஈடுபட்டுள்ளனர் என்று கூறிய அவர், திமுகவுக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.