Categories
தேசிய செய்திகள்

சுயதொழில் தொடங்க ஆசையா…? பெண்களுக்கான அருமையான திட்டம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல துறைகளிலும் முன்னேறி  வருகின்றனர். மேலும் சிலர் சுயமாக தொழில் தொடக்கி வருகின்றனர். இந்நிலையில் மகளிர் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பிரபல அமேசான் நிறுவனம் சஹெலி (Saheli) என்ற சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஏராளமான பெண்களை இணைத்து அவர்களுக்கு பொருளாதார வலிமை சேர்ப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம். எனவே, சுயமாக தொழில் செய்ய விரும்பும் பெண்களும், அமேசான் இணையதளம் மூலம் தங்களது பொருட்களை விற்பனை செய்து பணம் சம்பாதிக்க வேண்டுமென விரும்பும் பெண்களும் இத்திட்டத்தில் இணைந்துகொள்ளலாம்.

கலைஞர்களாக இருக்கும் பெண்களும் தங்களது கலைப் படைப்புகளை அமேசானில் விற்பனை செய்து பணம் ஈட்டலாம். இத்திட்டத்தில் இணைய நிறுவனப் பதிவு, வங்கிக் கணக்கு, ஜிஎஸ்டி எண் ஆகியவை தேவை. இதுபோக, ஆதார்  அப்டேட் செய்யப்பட வேண்டும். மேலும், பொருட்களை உற்பத்தி செய்வதற்கு தேவையான இடமும், உபகரணங்களும் தங்களிடம் இருக்கிறது என்பதை சம்பந்தப்பட்ட பெண்கள் காட்ட வேண்டும். இத்திட்டத்தில் கிடைக்கும் பயன்களை பொறுத்தவரை, அமேசான் மூலம் ஒரு பொருளை விற்பனை செய்தால் 20% வரை கமிஷன் கிடைக்கிறது.

Categories

Tech |