தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் திமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ ஏசி சம்பத் தமிழகம் மேலிட பொறுப்பாளர் சிடி ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதன் பின் பேசிய அவர், சுயமரியாதை விரும்புவர்கள் பாஜகவிற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார். மேலும் சாதகமான சூழல் உள்ளதால் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.