Categories
உலக செய்திகள்

சுயமாக கருக்கலைப்பு செய்த பெண்?….. நடந்தது என்ன?…. போலீஸ் நடவடிக்கை…..!!!!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுயமாக கருக்கலைப்பு செய்து கொண்டதாக சொல்லி பெண் ஒருவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியது.

டெக்சாஸ் மாகாணத்தில் நடைமுறையில் உள்ள சட்டத்தை பொறுத்தவரையிலும் கருக்கலைப்பு செய்து கொள்வது என்பது தனியொருவரின் கொலையாகவே கருதப்படுகிறது. இதனிடையில் Lizelle Herrera எனும் 26 வயது பெண்மணியின் விவகாரத்தில் அவர் சுயமாக கருக்கலைப்பு செய்து கொண்டாரா (அல்லது) எவருக்கேனும் கருக்கலைப்புக்கு உதவினாரா என்பது வெளிப்படுத்தப்படவில்லை என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை Lizelle Herrera கைது செய்யப்பட்டதுடன், விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். எனினும் Herrera மீது எந்த பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்பதை நகரநிர்வாகம் கூற மறுத்துள்ளது.

இதற்கிடையே கருக்கலைப்புக்காக கொலை வழக்கு ஏதும் சுமத்த முடியாது என்று டெக்சாஸ் சட்ட விரிவுரையாளர் ஸ்டீபன் விளாடெக் தெரிவித்துள்ளார். டெக்சாஸில் 6 வாரங்களுக்கும் மேல் கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வதை தடை செய்து இருப்பது மாநிலத்தில் கருக்கலைப்பு எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்து உள்ளது. மேலும் கருக்கலைப்பு செய்ய உதவும் மருத்துவர்கள் (அல்லது) உதவுவோருக்கு எதிராக வழக்குத்தொடர தனிப்பட்ட குடிமக்களுக்கும் உரிமை அளித்துள்ளது. டெக்சாஸ் மாகாணத்தை பொறுத்தவரையிலும் கருக்கலைப்பு செய்து கொள்வது என்பது கொலை செய்வதற்கு நிகரான குற்றமாகும், இருந்தாலும் உரிய காரணங்களுக்காக மருத்துவர் ஒருவரால் கருக்கலைப்பு முன்னெடுக்கப்பட்டால் அது குற்றமாகாது என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |