Categories
சினிமா தமிழ் சினிமா

சுயேச்சையாக போட்டியிடும் பிரபல பாடகர்…. வேட்புமனு தாக்கல்…. இந்த முறை வெற்றி உறுதி….!!!

கானா பாலா தனது சொந்த ஊரில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

கானா பாலா தமிழ்த் திரைப்படங்களில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் ஆவார். கானா பாடல்களில் மிகச் சிறந்த பாடலாசிரியராகவும் பாடகராகவும் விளங்குகிறார். அட்டகத்தியில் ‘ஆடி போனா ஆவணி’, ‘நடுக்கடலுல கப்பல’ பாடல்கள் மூலம் பிரபலமானார். தமிழ் சினிமாவில் 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இசையமைப்பாளர் தேவாவிற்குப் பின்னதாக கானா பாடல்களை தமிழ் திரைப்படத்துறையில் மீள்வரவு செய்வதில் இவருக்கு முதன்மை இடம் உள்ளது.

புளியந்தோப்பு கன்னிகா புரம் பகுதியை சேர்ந்த கானா பாலா சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் ஆறாவது மண்டலம் 72 -வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் 2006-ஆம் ஆண்டு ஏற்கனவே அந்த வார்டில் போட்டியிட்டு 2வது இடம் பெறும் பிடித்திருந்தால் பிறகு 2010-ஆம் மீண்டும் போட்டியிட்டு இரண்டாவது இடமே பிடித்தார். தற்போது மூன்றாவது முறையாக அதே வார்டில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில் கடந்த 19 வருடங்களாக இந்தப் பகுதியில் கவுன்சிலராக வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன். இது நான் பிறந்து வளர்ந்த ஊர். இந்தப் பகுதி மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்யவே தேர்தலில் போட்டியிடுகிறேன். ஏற்கனவே இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு நன்கு அறிமுகமானவன் தான் அதனால் இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்று தெரிவித்தார்.

Categories

Tech |